நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ரயில்வே நிலங்களில் பயிர்ச் செய்கை!
ரயில்வே நிலங்களில் குறுகிய கால பயிர்ச் செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகை முறையின் கீழ் இது வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உணவு நெருக்கடி
உணவு நெருக்கடி காரணமாக பயிர்ச்செய்கைக்கான அவசரத் தேவையினால், ரயில்வே நிலங்களில் குத்தகை அடிப்படையில் குறுகிய கால பயிர்ச் செய்கைக்கான அனுமதியை விவசாய அமைப்புகளுக்கு வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அந்த நிலங்களில் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என்பதனால் , குறுகிய கால பயிர்களான மிளகாய், உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, உலர் வலயத்தில் விளையும் பிற பயிர்கள், தானியங்கள், கீரைகள் போன்றவற்றை பயிரிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக ,விவசாயிகள் அமைப்புகள் மட்டத்தில் வலயச் செயலரை சந்தித்து செயல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.