போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மோதல்!
மஹவ ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறிய நால்வர் மதுபோதையில் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரயில் நேற்று (15) மாலை 4.10 மணியளவில் மஹவ நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நிலையில் இந்த நால்வரும் ரயிலுக்குள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பயணிகள் அவசரகால சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தம் செய்துள்ளனர்.
இதனையடுத்து ரயிலிலிந்து இறங்கி குறித்த நால்வரும் அங்கு காணப்பட்ட கட்டைகளால் ரயிலைத் தாக்கியுள்ளதோடு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது..
இதன்போது உடனடியாக செயற்பட்ட ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அவர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நால்வரும் பயணிகளிடம் இருக்கைகளை கோரியதால் மோதல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்போதே அவர்கள் பயணிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.