போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மூவர் தொடர்பில் வெளியான சோக தகவல்!
புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 36 வயதுடைய தாய், 06 வயது மகள் மற்றும் 09 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வகுப்பு முடிந்து வீட்டுக்குப் பயணித்துக்கொண்டிருந்தபோது, புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் முந்தலம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.