இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
வட மாகாணத்தை சுற்றி நடைபயணம்!

வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஆரம்பித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த ரோஷன் என்கிற இளைஞர், தற்போது சற்றே உடல்நிலை தேறிய நிலையில் இந்த நடைபயணத்தில் இறங்கியுள்ளார்.
நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவர் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
வவுனியா நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பித்த இந்த நடைபயணம் 3 நாட்கள் வட மாகாணத்தை சுற்றி நடந்து, வவுனியாவில் மீண்டும் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.