வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி மீது விசாரணை

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இன்று (29.07.2024) காலை 10.00 மணிக்கு புலனாய்வுத்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு அமைய சமூகமளிக்குமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அமலநாயகி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.