போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த 2-ம் திகதி புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதில் ஒருவரான எம்.இமாத் என்ற இளைஞர் குருநாகல் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது குருநாகலிலிருந்து மேலதிக சிகைச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று (09-09-2022) மாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
நாகவில்லு பகுதியில் பஸ்ஸொன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே மோட்டார் சைக்கிள் கெப் வண்டியில் நேருக்கு நேர் மோதியே விபத்து இடம்பெற்றது.