நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை விரைவாக அச்சிடுவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் அச்சடிக்கும் வசதிகள் அச்சகத்தில் இருப்பதாக அதன் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்தார்.
அத்துடன் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பாதுகாப்பை தேர்தல் ஆணையத்திடம் இருந்து வழங்குவதன் மூலம் இது தொடர்பான பணிகளை 28 நாட்களுக்குள் முடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் தேவைப்படுவதாக கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.