வீட்டிற்கு வந்த விருந்தாளியின் செயல்!
வீட்டில் தங்கி இருந்த விருந்தாளி ஒருவர் யாரும் இல்லாத சமயம் சிலிண்டரை திருட முயன்ற போது பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது நேற்றையதினம் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு திரட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பசுமலை பகுதியை சேர்ந்தவர் எக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வீட்டில் விருந்தாளியாக வந்து தங்கி நின்று வெற்று சிலிண்டரை திருடி விற்க முயன்றுள்ளார்.
தகவலறிந்த பிரதேச வாசிகள் நபரை பிடித்து நயப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.