வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த அனர்த்த நிவாரண அதிகாரி

அனர்த்த நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு இரத்தினபுரி குருவிட்டவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (31-05-2022) இடம்பெற்றுள்ளது.
கிரியெல்ல பிரதேச செயலகத்தின் அனர்த்த நிவாரண அதிகாரி புன்சிறி கருணாரத்ன என்பவரே குருவிட்ட, கோனாபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெள்ளம் சூழ்ந்த வீதியில் சுமார் 200 மீற்றர் தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.