நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வைத்தியசாலையிலுள்ள மகனை பார்க்க சென்ற 25 வயது இளம் தந்தை விபத்தில் சிக்கி பலி
கொழும்பு – காலி பிரதான வீதியில் பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 வயதுடைய இளம் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் தனது பிள்ளையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
மக்கொனை அக்கரமலை பிரதேசத்தை சேர்ந்த இளம் தந்தையே உயிரிழந்துள்ளார்.
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளையை பார்க்கச் சென்ற இவர் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது, எதிரே வந்த லொறியுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.