வைரஸ் தொற்று காரணமாக இளம் வைத்தியர் உயிரிழப்பு !
கொராணாவின் காரணமாக சிகிச்சசை பெற்று வந்தததையடுத்து நிமொணியா தொற்றினால் இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த தீபால் அமரசூரிய என்ற 30 வயதுடைய பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் என தெரிளவந்துள்ளது.
இவர் கொராணாவிற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் நிமோணியா காய்ச்சலுக்கு உள்ளாகி நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.