40 இலட்சம் பெறுமதியான 43 தொலைபேசியுடன் பொலிசாரின் வலையில் சிக்கிய திருடர்கள்!
யாழில் கடந்த சில மாதங்களாக தொலைபேசிகளைத் திருடி சென்ற கும்பலில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இச்சம்பவமானது நாவற்குழி மற்றும் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த கும்மல் கடந்த சில மாதங்களாக தொலைப்பேசித்திருட்டில் ஈடுபட்டு பெறுமதியான தொலைப்புசிகளை திருடி வந்துள்ளனர்.
இவ்வாறு திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 23,24 மற்றும் 27 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு வந்த ரகசியதனவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்த பெருமதிமிக்க தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளது.