போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய யானைகள்!
மட்டக்களப்பில் எரிபொருளுக்கபாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை அவ்வழியே சாலையை கடக்க முயன்ற யானைகள் மோதித் தள்ளியதில் இரு சக்கர வாகனங்கள் மிகுந்த சேதத்திற்குள்ளாகின.
மட்டக்களப்பு – வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற இரு சக்கர வாகனங்களுக்கே இந்நிலமை ஏற்பட்டுள்ளது.
இதில் 6,7,8,9 ஆம் இலக்க வாகனங்கள்; எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்களுக்கே இன்று அதிகாலை 05 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதலினால் மூன்று வாகனங்கள் முற்றாக சேதமடைந்ததாகவும் 4 வாகனங்கள் சிறிதளவு சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.