இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
மட்டக்களப்பில் பயங்கர விபத்து: ஒருவர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் சந்திவெளியில் இன்று மாலை (01-09-2022) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் முருகன் கோவில் வீதி கோரகல்லிமடு கிரான் எனும் இடத்தை சேர்ந்த 21 வயதுடைய ஜீவரெத்தினம் சனுஜன் என்பவரே பலியாகியுள்ளார்.
அத்தோடு சந்திவெளி சந்தை வீதியை சேர்ந்த சன்முகநாதன் சுதாநிதி என்ற தாயும் நல்லரெட்ணம் யதுஷிகா என்ற 04 வயது மகளுமே பலத்த காயங்களுக்கு உள்ளாகி சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.