அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞன் பலி!
கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் கொழும்பு வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவல் குறித்த பகுதியையுடைய 37 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இந்நபர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் வேலை பார்க்கும் போது இந்த அசம்பாவிதம் சிபழ்ந்துள்ளதென விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.