போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பில் ஆயுதங்களுடன் புகுந்த வன்முறைக் கும்பலால் பரபரப்பு!
கொழும்பில் வன்முறைக் கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்து ஒரு ஆண் மற்றும் அவரது சகோதரியை கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி படுகாயமடைந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மைத்திரி விகாரை வீதியில் 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு முச்சக்கரவண்டிகளில் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணித்த ரண்டு முச்சக்கரவண்டிகள், நான்கு வாள்கள், மூன்று மன்னா மற்றும் இரண்டு தடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்தில் படுகாயமடைந்த 52 வயதுடைய நபரும் அவரது சகோதரியான 47 வயதுடைய பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் எனவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு குழுவினர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகராறு காரணமாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.