மஹரகம எரிபொருள் நிலையத்தில் எரிபொருள்க்காக வரிசையில் நின்ற இளைஞனை கொடூரமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!
மஹரகம எரிபொருள் நிலையத்தில் எரிபொருள்க்காக வரிசையில் நின்ற இளைஞனை கொடூரமாக தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றள்ளது.
இந்த தாக்குதலானது மஹரகம பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி நடத்தியதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்தான தாக்குதல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்த பின்னர் தொட்டிகளைக் காட்டுமாறு கோரப்பட்டமையினாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.