நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வீடு புகுந்து மூதாட்டியை கொன்று விட்டு கொள்ளையடித்த திருடன்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியனை கொன்றுவிட்டு அவரின் காதில் உள்ள காதணி மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் பிற்பகல் பொல்கஹவெல, தமுனுபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி தனியாக இருக்கும் வேளையில் மூதாட்டியின் காதுகள் அறுக்கப்பட்டு காதணி மற்றும் விட்டில் உள்ள நகைகள் கொள்ளளையடிக்கபப்பட்டுள்ளது.
மேலும் மகளின் 75000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணிணியும் இதன்போது கொாள்ளையடிக்க்பட்டுள்ளது.
இதனையடுத்து விட்டிற்கு வந்த அவரது மகள் தாயை கண்டு அதிர்ச்சியுற்று பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.