உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நீதிமன்றில் சரணடைந்த நெவில் சில்வாவுக்கு பயணத்தடை

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று, 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான நெவில் சில்வா, இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.