உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை மீளாய்வு செய்ய விசேட பொலிஸ் குழு நியமனம்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் தலைமையை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட மேற்கொள்கிறார். இவருடன் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் ஆகியோரும் குழுவில் இணைந்துள்ளனர்.
66,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அடிக்கடி ஆய்வு செய்யும் பணியில் இந்த குழு ஈடுபடுவதாகவும், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டால் அதனடிப்படையில் புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தகவலின்படி, முக்கிய குழுவின் கீழ் பல துணைக் குழுகளும் ஏற்கனவே பணியை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மேற்படி அறிக்கை ஏப்ரல் 20ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்தார்.