நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கிரிக்கெட் அணியின் தலைவி 9ஏ சித்தி பெற்று சாதனை
கல்வி பொது தராதர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியது.
இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9ஏ சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார்.
இவர் கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரியின் மாணவி என கூறப்படுகின்றது.
அத்தோடு இவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார்.
நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு 518,245 பரீட்சார்த்திகள் முகம்கொடுத்தனர்.
அவர்களில் 407,785 பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,460 தனியார் விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.