போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வீதியோரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் சிசு: கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சியில் வீதியோரத்தில் உயிருடன் பெண் சிசு மீட்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றையதினம் கிளிநொச்சி – அக்கராயன் குளம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பிரதான வீதியோரத்திலேயே இந்த சிச கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு சொன்ன தகவலின் அடிப்படையில் மருத்துவ சுகாதாரப்பிரிவு சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு பொதுவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டு பராமறிக்கப்பட்டு வருகின்றது.