உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தேர்தல் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

2025 மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி, தேர்தல்கள் ஆணைக்குழு தொழிலாளர்களுக்காக விசேட விடுமுறை வழங்குமாறு அறிவித்துள்ளது.
அதன்படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், குறைந்தபட்சம் இரண்டு மணிநேர சிறப்பு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறை, தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியே வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிக்க தொழிலிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு செல்லும் தூரத்தின் அடிப்படையில் விடுமுறை காலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
அட்டவணை விவரம்:
-
40 கி.மீ அல்லது குறைவான தூரத்திற்கு – அரை நாள் விடுமுறை
-
40 கி.மீ முதல் 100 கி.மீ வரை – ஒரு நாள் விடுமுறை
-
100 கி.மீ முதல் 150 கி.மீ வரை – ஒரு நாளரை விடுமுறை
-
150 கி.மீக்கு மேல் – இரண்டு நாட்கள் விடுமுறை
சில விசேட சந்தர்ப்பங்களில் மூன்று நாட்கள் விடுமுறையும் வழங்கப்படலாம் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் எழுத்துமூலமாக விடுமுறை கோர வேண்டும், மேலும் தொழில்தருநர்கள் விடுமுறை வழங்கிய ஆவணங்களை பதிய வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு திடமாக அறிவித்துள்ளது.