கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட பூசாரி: தலையை ஆற்றில் வீசிய இளைஞன்!
மாத்தறை அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் பூசாரி ஒருவர் கூரிய ஆயுதத்தினால், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்படட நபரின் தலையை எடுத்துச் சென்று நில்வலா கங்கை ஆற்றில் போட்டதாக கூறப்படும் கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
24 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஆற்றில் போட்ட பூசாரியின் தலை மற்றும் கொலை செய்ய பயன்படுத்தி வாளை தேடி கண்டுப்பிடிக்க பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரின் தாய் மற்றும் தந்தையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
இதனிடையே கொலை செய்த சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளாகி, பூசாரியின் 60 வயதான மனைவி மற்றும் 40 வயதான மகளும் வெட்டுக்காயங்களுடன் அக்குரெஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.