உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மே தின ஊர்வலத்திற்கு மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் அழைப்பு

மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அடக்குமுறைகளுக்கும், வளச் சுரண்டல்களுக்கும் எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் விதமாக மே தின நிகழ்வுகள் மன்னாரில் முன்னெடுக்கப்பட உள்ளன என்று மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் வட மாகாண பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) மன்னாரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது “இலங்கையின் அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, அடக்குமுறைக்கும் வளச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தும் நோக்கில், மன்னார் நகரில் முதல் முறையாக மே தின நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.”
மனித உரிமை மீறல்கள் மற்றும் காணி அபகரிப்புகள் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன என்றும், குறிப்பாக இந்திய மற்றும் அமெரிக்க ஒப்பந்தங்கள் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பூரணமாக பாதித்துவிட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், திட்டமிட்ட அபிவிருத்தி திட்டங்கள் மூலம் மன்னாரின் இயற்கை வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன என்றும், அதனை எதிர்த்தே மே தினத்தில் மக்கள் ஒன்றிணைவதாகவும் அவர் கூறினார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானம் மதியம் 2 மணி வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஜார் மே தின பொதுக்கூட்டம் மதியம் 3 மணி, மன்னார் பஜார் பகுதியில்
இந்த நிகழ்வின் வாயிலாக, வட மற்றும் கிழக்கு மாவட்டங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு நினைவூட்டப்பட உள்ளது.
“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்து உறுதியான பதிலை ஜனாதிபதியால் வழங்க முடியும். ஆனால் தற்போது அது குறித்து ஒரு மாயையான நிலை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது,” என அவர் கூறினார்.
இந்த மே தின நிகழ்வில் இலங்கையின் பல மாகாணங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.