உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் கலந்து கொண்டது.