போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் 18 மாணவர்கள் நேற்றைதினம் (26-08-2022) குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் 18 பேரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஓரிரு நாட்களுக்குள் இவ்வாறு பாடசாலையின் மூன்றாவது மாடிக் கட்டிடத்தில் கூடு கட்டியிருந்ததாகவும், அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் கடும் காற்று காரணமாக நேற்று காலை குறித்த குளவிக் கூடு கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளதாக புத்தளம் சாஹிரா கல்லூரியின் அதிபர் முஹம்மது நஜீம் தெரிவித்தார்.
இதனால் 6 ஆம் தரம் முதல் உயர் தரம் வரையில் கல்வி பயிலும் 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், எந்த மாணவர்களுக்கும் கடுமையான பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
மேலும், புத்தளம் பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இன்று பாடசாலைக்கு விஜயம் செய்து குளவிக்கூடு கட்டப்பட்டிருந்த பாடசாலை கட்டடத்தை பார்வையிட்டதுடன், குறித்த குளவிக் கூட்டை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் என கல்லூரியின் அதிபர் மேலும் கூறினார்.