புத்தளத்தில் கோர விபத்து: தேரர் ஒருவர் உயிரிழப்பு!
புத்தளத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் தேரர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நாலவில்லு பகுதியில் இன்று காலை (11-09-2022) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
வீதியைக் கடக்க முற்பட்டபோதே எதிர்த்திசையில் வருகைத் தந்த முச்சகர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளான தேரரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்று அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி தேரர் உயிரிழந்துள்ளார்.
ஹொரவபொத்தானை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதியிடம் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.