தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
புத்தளத்தில் விபத்து: அதிஷ்டவசமாக உயிர்த்தப்பிய சாரதி!
புத்தளம் – பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து அருவக்காட்டிற்குச் சென்ற புகையிரதத்தில் கெப்ரக வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் புத்தளம் தில்லையடி ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான கெப் வண்டியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.
குறித்த இடத்தில் ரயில் பாதுகாப்புக் கடவை இல்லாமையினாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.