உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வாக்குக்காக ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறிய வடக்கு தமிழ் அரசியல்வாதிகள்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இன்று யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் வாக்குக்காக இனவாதத்தை கையாள்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது “வாக்கு அரசியலுக்காக சிலர் ராஜபக்ச சகோதரர்களாக மாறி, மக்களை பிரித்தாளும் இனவாதத்தை கையாள்கின்றனர். இது தெற்கிலும், வடக்கிலும் காணப்படும் பழைய இனவாத அரசியலின் தொடர்ச்சியாகும்.”
அதே நேரத்தில், அவர் தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகள் மூலம் இன ஒற்றுமையை ஏற்படுத்தி, நாட்டை முன்னேற்ற வழியில் கொண்டு செல்ல முடியும் என வலியுறுத்தினார்.
“தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜனாதிபதியும், பிரதமரும் இதற்காக முழு ஆதரவு வழங்குகின்றனர். இனவாத அரசியலுக்கு மக்கள் இனி இடமளிக்கமாட்டார்கள் என்பதை மே 6 ஆம் திகதி தேர்தலில் உறுதிசெய்ய வேண்டும்.” அவர் மேலும் கூறினார்: