உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை

சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையில்லாமல் தேங்கி உள்ளன என்பது தொடர்பான தகவல்களை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முற்றிலும் நிராகரித்துள்ளது.வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 75% விற்பனையாகிவிட்டது என்று சங்க தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களின் ஊடாக 7000 புதிய வாகனங்கள் இதுவரை நாட்டிற்குள் வந்துள்ளன. புதிய வாகனங்களுக்கு மாறாத தேவை நிலவுகிறது என்றும், வாகன வரத்திலும் எந்த ஒரு பற்றாக்குறையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டு நாணய பெறுமதியில் ஏற்படும் தளர்வு காரணமாக, வாகன விலைகள் குறைவடையும் வாய்ப்பு குறித்து தெளிவான கணிப்பு அளிக்க முடியாத நிலைமை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ள நுகர்வோர் விலை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகிதங்களை கவனித்துக்கொள்வது முக்கியம்.