பச்சிளம் குழந்தைக்கு எமனான தந்தையின் வாகனம்
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்ட 2 வயது குழந்தை பலியான சம்பவம் ஒன்று, இன்று (07) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தம்பலகாமம் நாயன்மார் திடலை சேர்ந்த ஆர்.நசிட்றா (வயது 02) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸார் விசாரணை
தந்தை, திருகோணமலைக்கு திருமண வைபவத்துக்கு செல்ல உள்ள நிலையில், வீட்டில் வைத்து வானை பின்னால் எடுத்த போது, அதற்குள் சிக்குண்டு தனது மகள் ஸ்தலத்தில் பலியானதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில் வான் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், குழந்தையின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.