33000 லீற்றர் எரி பொருளுடன் கவிழ்ந்த வாகனம்: எரி பொருளை அள்ள திரண்ட மக்கள்!
திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பௌசர் இன்று காலை 33000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, ஹப்புத்தளை- பங்கெட்டிய பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதி வழுக்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விபத்துக்குள்ளான பௌசரிலிருந்து பிரதேசவாசிகள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எரிபொருளை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.