வவுனியாவில் திருட்டு சம்பவம்: பொருளாதாரக் கஷ்டத்தினால் திருடிய நபர்!
வவுனியாவில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றையதினம் வவுனியா சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வர்த்த நிலையத்தை அந்நபர் உடைத்து அதில் உள்ள 04 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து வரத்தநிலையத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் திருடியமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரிடம் இருந்து 04 இலட்சம் ரூபாய் பணமும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.