வவுனியாவில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் வீட்டில் இருந்து 150 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று (24/08/2022) இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது இவ்வாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த 30வயதுடைய குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளுக்காக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரனைகள் முடிவடைந்ததும் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.