Tuesday May 20, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

மே 18 ஆம் திகதியே சிறந்த நாள்; சிங்கள இளைஞனின் பதிவு

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இந்தியச் செய்திகள்

உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

August 3, 2024 0 Comment
 உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இராமேஸ்வரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற  இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் உயிரிழந்தவரும், உயிருடன் உள்ளவர்களும் இன்று அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியதாகவும் உள்ளாடைகளுடன் கடற்படை வீரர்கள் அழைத்துச் சென்று விசாரித்ததாக உயிர் தப்பி வந்த இந்திய கடற்றொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மலைச்சாமி என்ற கடற்றொழிலாளர் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன்  என்ற கடலில் கடற்றொழிலாளி மாயமாகி உள்ளார்.

மேலும் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று மதியம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய கடற்றொழிலாளி ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள் மற்றும் மலைச்சாமி உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.

அனுப்பி வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் இறந்தவரின் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைத்தனர்.

உடலை பெற்று கொண்ட கடற்படை வீரர்கள் இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு எடுத்து வந்து இராமேஸ்வரம் கடற்றொழில் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மலைச்சாமியின் உடல் நோயாளர் காவு வண்டி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

 

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

உப்பு தட்டுப்பாடால் பேக்கரி தொழிலுக்கு பாதிப்பு

May 20, 2025 1 min read

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல்

May 20, 2025 1 min read

நல்லூர் கந்தன் வளாகத்தில் அசைவ உணவகமா? பக்தர்கள் கவலை!

May 20, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email