போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தம்பியின் சடலத்தை மடியில் கிடத்தியவாறு வீதியில் இருந்த சிறுவன்
மத்திய பிரதேசத்தில் சாலையோரத்தில் இரண்டு வயது தம்பியின் இறந்த உடலை மடியில் கிடத்தி கண்ணீருடன் உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் புகைப்படம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொரேனா மாவட்டம் அம்பா கிராமத்தில் வசிக்கும் பூஜாராம் என்பவருக்கு, குல்ஷன் மற்றும் ராஜா என்ற இருமகன்கள் உள்ளனர்.
இவரது இரண்டு வயதான மகன் ராஜாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக 30கி.மீ தூரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
தனது மூத்த மகனுடன் வந்து மருத்துவமனையில், தனது இரண்டு வயது மகனை அனுமதித்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகனின் உடலை கட்டிப்பிடித்து கதறிய தந்தை உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கேட்ட போது குறித்த மருத்துவமனை மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பின்பு தனியார் ஆம்புலன்ஸில் உடலை ஏற்றிச் செல்ல ரூ.1500 கேட்டுள்ள நிலையில், அதற்கு வழியின்றி, தனது எட்டு வயது மகனிடம் இரண்டு வயது மகனின் சடலத்தை மடியில் கிடத்தி வைத்துவிட்டு வாகனம் ஏதாவது கிடைக்குமா என்று தேடிச் சென்றுள்ளார்.
தம்பியின் உடலை சுற்றும் ஈக்களை விரட்டி விட்டு, கண்ணீருடன் இருக்கும் அந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பி காண்பவர்களின் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.
குறித்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
இதையடுத்து பூஜாராமுக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளதுது. தம்பி உடலுடன் கண்ணீருடன் குல்ஷன் அமர்ந்திருந்த படத்தை பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.