48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்திக்கு கொவிட் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதன்போது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.