போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களை தடுத்து வைக்க மாட்டோம் என இலங்கை தலைவர்கள் உறுதிமொழியளித்திருந்தனர்.
அந்த உறுதிமொழிக்கமையவே தாம் இலங்கைக்கு பயணம் செய்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் விமானத்தை தடுத்து வைப்பது சிக்கலாக இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவில் தரையிறங்கவிருந்த 191 பயணிகள் பயணிக்கக்கூடிய விமானம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து நிறுவனம் ஒன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விமானம் தடுத்து வைக்கப்பட்டது. இந்த விமானம் இதற்கு முன்னர் ஏழு முறை இலங்கைக்கு வந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.