போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கனேடிய மாகாணம் ஒன்றில் இலங்கையர்கள் பேரணி!
இலங்கையில் தங்களவர்கள் கஷ்டத்திலிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தாங்கள் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக கனேடிய மாகாணம் ஒன்றில் மக்கள் பேரணிகளில் இறங்கியுள்ளார்கள்.
கனடாவின் Saskatchewanஇல் வாழும் இலங்கையர்கள்தான் இப்படி தங்கள் மக்களுக்காக பேரணிகளில் இறங்கியுள்ளார்கள்.
இலங்கையில் நிலவும் பயங்கரமான நிலைமைக்கு பொருளாதார மேலாண்மை சரியாக இல்லாததே காரணம் என்று கூறும் Saskatchewan பல்கலையில் கால்நடை நுண்ணுயிரியல் பயிலும் தினேஷ் (Dinesh Wellawa. 39), சென்ற மாதம் தான் இலங்கைக்குச் சென்றபோது இலங்கையின் நிலைமையைக் கண்ணால் கண்டதாகத் தெரிவிக்கிறார்.
எப்போதும் சுற்றுலாப்பயணிகளால் நிறைந்திருக்கும் விமானங்கள் வெறுமையாக காணப்பட்டதாகவும், நிரம்பி வழியும் ஹொட்டல்கள் இப்போது 50 சதவிகித தள்ளுபடி அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு வாங்குவதற்காக இரண்டு கிலோமீற்றர் தொலைவுக்கு வரிசையில் நிற்கவேண்டியிருந்ததாகவும், பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்றால், அங்கு எந்த பொருளும் இல்லை என்றும் கூறுகிறார் தினேஷ்.
அதேபோல், Ushan Alahakoon (27) என்பவர், தன் தந்தைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவருக்கு நீரிழிவு பிரச்சினை உள்ளது என்றும் கூறுகிறார்.
இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் மருந்துகள் வாங்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது என்று கூறும் Ushan, இலங்கை மக்கள், வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்பச் சொல்லத் தயங்குவதாக தெரிவிக்கிறார். அப்படி மக்கள் அனுப்பும் பணத்தை அரசு கைப்பற்றிவிடும் என அவர்கள் அஞ்சுவதாக அவர் தெரிவிக்கிறார்.
ஆகவே, கனடா அரசு இலங்கைக்கு உதவ முன்வருமானால், பணமாக அனுப்பாமல், மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களாக அனுப்பினால் அது உண்மையாகவே பெரிய உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.
உணவில்லாததால் மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பது அவமானம் என்று கூறும் Ushan, உடல் நலமில்லாத, வயதான தன் தந்தை பெட்ரோல் வாங்குவதற்காக 15 மணி நேரம் வரிசையில் நிற்கவேண்டியிருந்தது என்கிறார்.
கனடா அரசு இலங்கைக்கு மனிதநேய உதவி செய்யுமானால், அது இலங்கையின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் என்கிறார் Ushan.