சமூக வலைதளத்தில் வைரலாகும் விமானத்தில் இருந்த அருவருப்பான குட்கா கறையின் புகைப்படம்
விமானத்தில் இருந்த அருவருப்பான குட்கா கறையின் புகைப்படம் ஒன்றை ஸ்ரீமோயி சௌத்ரி என்ற நபர் பதிவிட்ட நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
மேலும் இந்த புகைப்படத்தை இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் சரண் தெரிவித்துள்ள கருத்தில்,
அதிகாரிகள் நடத்திய பல பிரச்சாரங்களுக்குப் பிறகும், பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை மக்கள் மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் புகைப்படம் சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த புகைப்படம் 11,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், ரியாக்ஷன்களையும் பெற்றுள்ளது.
இதேவேளை, புகைப்படம் எவ்வளவு அருவருப்பானது என்று சிலர் எழுதினாலும், மற்றவர்கள் அந்த நபரின் செயலுக்காக அதிக அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.