போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்த பிரித்தானிய இராணுவ ஹெலிகாப்டர்கள்
நான்கு பிரித்தானிய இராணுவ ஹெலிகாப்டர்கள் சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
அதன்படி, டிசினோ பகுதியில் உள்ள லுகானோ அருகே ஹெலிகாப்டர்கள் சுவிட்சர்லாந்தின் எல்லையை கடந்து பிரான்ஸ் வழியாக வவுட் மாகாணத்தில் உள்ள லா கிவ்ரின் என்ற இடத்தில் இருந்து வெளியேறின.
பிரித்தானிய ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதி வழியாகச் சென்றதாகவும் இன்னும் தரையிறங்கவில்லை என்றும் சுவிஸ் ராணுவம் கூறியது.
இந்த விமானத்திற்கு பிரித்தானிய அதிகாரிகள் சுவிட்சர்லாந்திடம் சிறப்பு அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த ஹெலிகாப்டர்கள் எதற்காக சுவிட்சர்லாந்திற்கு சென்றது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.