போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திடீரென 32 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட Charles-Henry Kurzen
அமெரிக்காவிலிருக்கும் 2.9 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய குடியிருப்பை வாங்குவதற்காக அதை பார்வையிட வந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், திடீரென 32 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான Charles-Henry Kurzen (43) என்ற அந்த பிரான்ஸ் நாட்டவர், நேற்று முன்தினம் நியூயார்க்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்கும் திட்டத்துடன் அதைப் பார்வையிட வந்திருக்கிறார்.
மதியம் 1.15 மணி வாக்கில், அந்த குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள கட்டிடத்தின் 32ஆவது மாடியிலிருந்து குடியிருப்பை பார்வையிட்டுக்கொண்டிருந்த Kurzen, பால்கனியைப் பார்க்கமுடியுமா என தனது ரியல் எஸ்டேட் ஏஜண்டிடம் கேட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, அந்த ஏஜண்ட் அவரை பால்கனிக்கு அழைத்துச் செல்ல, திடீரென பால்கனியிலிருந்து கீழே குதித்திருக்கிறார் Kurzen.
அவசர உதவிக் குழுவினர் அங்கு சென்று பார்க்கும்போது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருக்கிறார் Kurzen.
பல் மில்லியன் சொத்துக்கள் கொண்ட Kurzen, ஏன் திடீரென மாடியிலிருந்து குதிக்க முடிவு செய்தார் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில், Kurzen தொடர்புடைய வேறொரு சம்பவத்தை நினைவுகூருகின்றன, ஊடகங்கள்.
பாரீஸிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து, குறுகிய காலத்தில் தன் கடினமான உழைப்பால் உயர்ந்த Kurzen, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமெரிக்கவாழ் பிரெஞ்சு செல்வந்தர்களுடன் நியூயார்க்கில் பார்ட்டியில் பங்கேற்பதுண்டாம்.
அப்படி 2004ஆம் ஆண்டு, ஒரு பார்ட்டிக்கு Kurzen சென்றிருந்தபோது, அங்கு புகழ்பெற்ற நியூசிலாந்து சூப்பர் மொடலான Rachel Hunter மற்றொரு தளத்தில் அமர்ந்திருப்பதைக் கவனித்துள்ளார்.
அவரிடம் சென்று, தங்களுடன் பார்ட்டியில் கலந்துகொள்ளுமாறு Rachelக்கு அழைப்பு விடுத்துள்ளார் Kurzen. ஆனால், எவ்வளவோ வற்புறுத்தியும், Rachel அவரது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.
எதனால் Rachel தனது அழைப்பை ஏற்க மறுத்தார் என தனக்குப் புரியவேயில்லை என்று அப்போது கூறியிருந்தார் Kurzen.