நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
புகலிடம் கோரி தமிழகத்தில் 7 பேர் தஞ்சம்
இலங்கையிலிருந்து மேலும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
படகுமூலம் பயணித்த அவர்கள், தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் திடல் பகுதியை இன்று காலை சென்றடைந்ததாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மற்றும் திருகோணமலையில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆண் ஒருவரும், இரண்டு பெண்களும், 4 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களை பொறுப்பிலெடுத்த தமிழக கரையோர காவல்துறையினர், விசாரணைக்காக மண்டபம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விசாரணை முடிந்த பின்னர், மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.