புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்வைக்கவுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ
கனடாவில் விரைவில் புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ(Justin Trudeau) தெரிவித்தார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ பகுதியில் உள்ள தொடக்க பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதமர் ட்ருடோ(Justin Trudeau) இதனை கூறியுள்ளார்.
அதேசமயம் முன்னைய காலங்களில் Liberal அரசாங்கம் கனடாவின் துப்பாக்கி சட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதை மேலும் வலுப்படுத்த கடந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) உறுதியளித்திருந்தார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, அவரது ஆணையின் ஒரு பகுதியாக, தொடர்ச்சியான துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி துப்பாக்கி உரிமம் சரிபார்ப்புகள், வணிகப் பதிவுகளை வைத்திருப்பது தொடர்பான விதிமுறைகளின் சமீபத்திய அறிவிப்புகளும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.