போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மதுபான விடுதி ஒன்றை திறக்க முடிவு செய்துள்ள பிரித்தானிய ராணியார்
பிரித்தானிய ராணியார் தமக்கு என மட்டுமாக மதுபான விடுதி ஒன்றை திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோர்போக்கில் அமைந்துள்ள அவரது சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் குறித்த மதுபான விடுதி செயல்படும் என கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட கிளப் ஒன்றை, மறு உருவாக்கம் செய்து, மதுபான விடுதியாக மாற்ற ராணியார் திட்டமிட்டுள்ளார்.
மட்டுமின்றி, சாண்ட்ரிங்ஹாமில் தற்போது பயன்பாட்டில் இல்லாத பகுதியை குத்தகைக்கு விடவும் முடிவாகியுள்ளதாம். இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் அது ராணியாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இளவரசர் வில்லியம் குடும்பத்தினருக்கும் குறித்த இல்லமானது உள்ளூர் விடுமுறையை கழிக்க தோதான பகுதியாக கருதுகின்றனர்.
சரியான நபர்கள் இந்த முயற்சியை முன்னெடுத்தால், அருமையான வாய்ப்பாக இருக்கும் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், குறித்த வளாகம் மதுபான விடுதி உள்ளிட்ட மாறுதலுக்கு உள்ளானால் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
20,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் மதுபான விடுதி என்ற திட்டத்தை முன்வைத்தவர் இளவரசர் சார்லஸ் என தெரிய வந்துள்ளது. குறித்த தோட்டமானது இளவரசர் சார்லஸ் மேர்பார்வைக்கு வந்த பின்னர், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.