கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றிய 4 வயது சிறுமி!

நான்கு வயது சிறுமி தனது பள்ளியின் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் பெரியவர்கள் போல உரையாற்றி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில் 4 வயது சிறுமி ஒருவர் தனது பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியுள்ளார். உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
அப்படி தான் இன்று ஒரு பாடசாலையில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது விடுதுறையின் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். இதில் ஒரு அதிபர் உரையாற்றிகொண்டு இருக்கிறார்.
அப்போது அங்கே சிறுமி ஒருவர் வந்து மைக்கை தானாக எடுத்து அதில் அவருக்கு தோன்றுகின்ற விடயங்களை மிகவும் தெளிவாகவும் எந்தவித கூச்சமும் இல்லாமல் பேசுகிறார்.
இதை அரங்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அவளின் ஆளுமையை பாராட்டினார்கள். மற்றும் அந்த சிறுமி பேசியதற்கு சிரிக்கவும் செய்தார்கள். தற்போது இந்த காணொளி இணையத்தில் பல இணையவாசிகளை கவர்ந்து வருகின்றது.