சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

அநுராதபுரம், பதவிய, மைத்திரிபுர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பதவிய பொலிஸாரால் நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பதவிய பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் ஆவார்.
சந்தேக நபர் நீண்ட நாட்களாக சட்டவிரோத மதுபானத்தினை தயாரித்து பதவிய உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்துள்ளமை பொலிஸார் நடாத்திய மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றின் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன