போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சித்திரவதை செய்து வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பிய கணவன் கைது!
கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராறின் காரணமாக மனைவி வெளிநாட்டிற்கு பிரிந்து சென்ற நிலையில் மகளை சித்திரவதை செய்து வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பிய கணவன் கைது.
இச்சம்பவமானது மட்டக்குளிய பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குறித்த பகுதியையுடைய 28 வயதுடைய நபர் என தெரியவந்துள்து.
கடந்த சில தினங்களாக மனைவி மற்றும் கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனைவி தனது மகளை பாட்டியின் வீட்டில் விட்டு விட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
இதனையறிந்த கணவர் பாட்டிவீட்டிற்கு வந்து மகளை சித்திரவதை செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியின் பாட்டி சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தில் அந்நபர் குறித்து முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.