தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு; கணவன் பலி… மனைவி வைத்தியசாலையில்
காலி, தடல்ல பகுதியில் தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்டட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி-கொழும்பு பிரதான வீதியில் தடல்ல மயானத்திற்கு அருகில் நேற்றையதினம் (20) மாலை தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த கணவன் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 38 வயதான மெலேகொட வஞ்சவல படபெந்திகே பத்தும் என்ற ‘லோக்கா’ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது அவருடன் பயணித்த அவரது மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்